Posts

பாதுகாப்புச் சபை   [ தொகு ] நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. [7]  இத்தகைய தீர்மானங்கள்,  ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள்  என அறியப்படுகின்றன. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள்  சீனா ,  பிரான்சு ,  உருசியா ,  ஐக்கிய இராச்சியம் ,  ஐக்கிய அமெரிக்கா  ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர்  பிரதேச அடிப்படையில்  பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில  அகர வரிசைப்படி  சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்
பொதுச் சபை   [ தொகு ] பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக  பொதுச் செயலர்  முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபற்றினர். பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை  தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதார
Image
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை - அனித்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளினதும் ஒன்று கூடல். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு. - நாடுகளுக்கான கட்டாயமற்ற அறிவுறுத்தல்களை வழங்கல் (ஒரு பாராளுமன்றம் அல்ல) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்தல் வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்கல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தெரிவு செய்தல்,அனைத்துலக நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளையும் தெரிதல்.
ஐக்கிய நாடுகள் முறைமை   [ தொகு ] ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் ஐக்கிய நாடுகள் செயலகம் அனைத்துலக நீதிமன்றம் 1994 ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. [1]  இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. [2]  அனைத்துலக நீதிமன்றம்  ஹேக்  நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, [3]  வியன்னா, [4]  நைரோபி [5]  போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன. அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலு
வரலாறு   [ தொகு ] தேசங்களின் அணி  இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது. 1943 அக்டோபரில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள்  மாஸ்கோவில்  ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென சனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்
ஐக்கிய நாடுகள் அவை நோக்கங்கள் ·           கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல் ; ·          பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். ·          மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் ·          மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து , இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார , பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். ·          இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே. ·          உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். ·          உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
     என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர் ? 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சாணக்கியர்.இந்திய வரலாற்றில் அவருக்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் உண்டு. அவர் அசத்தலாகச் சொன்னது: “ மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த மரங்களுக்குச் சமம் அது. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள் ” கலியுகத்திற்கு இது பொருத்தமாக உள்ளது:-))))) சாணக்கியர் சொன்ன மற்ற பொன்மொழிகளையும் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள். மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை! --------------------------------------------------- 1 "A person should not be too honest. Straight trees are cut first And Honest people are screwed first." ********** 2 "Even if a snake is not poisonous, It should pretend to be venomous." ********** 3 "The biggest guru-mantra is: Never share your secrets with anybody. If you cannot keep secret with you , do not expect that other will keep it! It will destro